சீனா எல்லைக்கு அருகில் பறந்த அமெரிக்க உளவு விமானம் இடைமறித்த சீனா போர் விமானம்

சீனா எல்லைக்கு அருகில் அமெரிக்க உளவு விமானம் பறந்த போது சீனா நாட்டு போர் விமானங்கள் அதனை வழிமறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2017-05-27 10:27 GMT
கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று அமெரிக்காவின் பி-3 ஓரியன் என்ற உளவு விமானம் சீனா எல்லைக்கு அருகில் பறந்துள்ளது.

அப்போது, சீனாவை சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் உடனடியாக அவ்விமானத்தை வழிமறித்து சென்றதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், சீனா இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பொய்யான தகவல்களை பரப்புவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சீனா எல்லைக்கு அருகில் உளவு பார்க்கும் நடவடிக்கையை அமெரிக்கா இனிமேல் மேற்கொள்ள கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வட கொரியா கடற்பகுதிக்கு அருகில் நிறுத்தியுள்ள இரண்டு போர்க்கப்பல்களை அமெரிக்கா உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

கொரியா தீபகற்பத்தில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதால் வட கொரியாவை சீண்டும் வேலையில் அமெரிக்கா ஈடுப்பட்டு வருவதாக சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்