அகதிகளாக உலக தலைவர்கள் ஒரு ஓவியரின் கற்பனை

சிரியாவை சேர்ந்த அப்துல்லா ஒமரி என்ற ஓவியர் உலக தலைவர்கள் அகதிகளாக வாழ்ந்தால் எப்படியிருக்கும் என கற்பனையான அவர்களின் ஓவியங்களை வரைந்துள்ளார்.

Update: 2017-05-29 11:11 GMT

சிரியாவில் பிறந்தவர் அப்துல்லா ஒமரி. பிரபல ஓவியரான இவர் அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் போர், வறுமை போன்ற காரணங்களால் வேறு நாட்டுக்கு புலம் பெயர்ந்தது போலவே அவரும் சென்றுள்ளார்.

தற்போது அப்துல்லா பெல்ஜியத்தில் வாழ்ந்து வருகிறார்.

உலகளவில் அகதிகளாக வேறு நாட்டுக்கு செல்லும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை தனது ஓவியத்தின் மூலம் உலகுக்கு கூற அப்துல்லா முடிவெடுத்தார்.

அதன்படி அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஒரு சராசரி அகதி போல உணவுக்கு வரிசையில் நிற்பது போலவும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு குழந்தையை தோளில் தூக்கி வைத்து கொண்டு நிற்பது போலவும் ஓவியம் வரைந்துள்ளார்.

அதே போல சிரியாவின் தலைவர் பஷீர் ஆசாத், வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன், ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகியோர் அகதிகளாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற ஓவியத்தையும் அவர் வரைந்துள்ளார்.

மேலும் செய்திகள்