சகாரா பாலைவனத்தில் 50 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் மரணம்

மேற்கு ஆப்பிரிக்காவிலுருந்து ஐரோப்பில் குடியேறுவதற்கு 70 க்கும் மேற்பட்ட மக்கள் லிபியா நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-06-28 06:30 GMT
நியாமி,

மேற்கு  ஆப்பிரிக்காவிலுருந்து  ஐரோப்பில் குடியேறுவதற்கு 70 க்கும் மேற்பட்ட மக்கள் லிபியா நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.

மூன்று லாரிகளில் 70 க்கும் மேற்பட்ட மக்களை ஏற்றிக்கொண்டு சகாரா பாலைவனம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது அந்த லாரி டிரைவர்கள் அவர்களை பாதியிலேயே விட்டுச்சென்றதாக தெரிகிறது.

அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று உதவி கேட்டு உள்ளனர். அவர்கள் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர். மீதி பேர் பாலைவனத்திலேயே மாட்டிக்கொண்டனர். இவர்கள் அனைவரும் நைஜீரியா , கம்பியா,இவொரி மற்றும் செனிகல் பகுதியை சேர்ந்தவர்கள் என இடம்பெயர்வர்களுக்கான உலகளாவிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி அப்பகுதி அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் ,” 15 பேர் தாகத்தில் தண்ணீர் கிடைக்காமல் இறந்திருப்பர். மீதி பேர் கிராமங்களை தேடி செல்லும் போது இறந்திருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது சரியாக தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் லாரி டிரைவர்கள் எதற்காக பாதியில் விட்டு சென்றார்கள் என்பது பற்றி சரியாக தெரியவில்லை. இது போன்ற சம்பவம் ஆப்ரிக்காவில் அடிக்கடி நடைபெறும் .வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இது போன்று சகாரா பாலைவனத்தை கடக்கும் போது இறக்கின்றனர். வண்டியில் ஏற்படும் பிரச்சனை அல்லது வழிதவறி செல்லும் போது இது போன்ற சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.

அதே போல் ஆப்பிரிக்காவிற்கும்  ஐரோப்பிற்கும் இடையேயான கடல் பகுதியில் மக்கள் கடந்து செல்லும் போது இறக்கின்றனர்.

சென்ற மாதம் இது போல் 40 மேற்கு ஆப்ரிக்கர்கள் வடக்கு நைஜீரை கடந்து செல்லும் போது தண்ணீர் கிடக்காமல் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்