அமெரிக்காவை யாரும் அச்சுறுத்த முடியாது - டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவை யாரும் அச்சுறுத்த முடியாது என்றார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Update: 2017-09-11 23:45 GMT
வாஷிங்டன் 

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, அமெரிக்காவில் பயங்கரவாதிகள் விமானங்களை கடத்திச்சென்று உலக வர்த்தக மையம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை தாக்கினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியானார்கள். இதன் 16-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், அவருடைய மனைவி மெலானியாவும் வெள்ளை மாளிகையில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டொனால்டு டிரம்ப், ‘பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்காக அமெரிக்காவின் ஆன்மா துக்கத்தில் கண்ணீர் வடிக்கிறது. பயங்கரவாதிகள், நம்மிடம் அச்சத்தை விதைத்து, நமது மனஉறுதியை பலவீனப்படுத்தலாம் என்று நினைத்தனர். ஆனால், அமெரிக்காவை யாரும் அச்சுறுத்த முடியாது. அப்படி நினைத்த எதிரிகள் மறைந்து விட்டனர். அமெரிக்கா ஒன்றுபட்டு நிற்கும்போது, உலகத்தின் எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாது’ என்றார்.

மேலும் செய்திகள்