சுஷ்மா சுவராஜின் ஐநா உரை ஆணவமானது: சீன ஊடகங்கள் விமர்சனம்

சுஷ்மா சுவராஜின் ஐநா உரை ஆணவமானது என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

Update: 2017-09-26 05:42 GMT
பெய்ஜிங்,

ஐக்கிய நாடுகள் அவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தியா ஐடி துறையில் உலகின் சூப்பர் பவர் நாடாக திகழ்வதாகவும் அதேவேளையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக அங்கிகரிக்கப்படுவதாக கடுமையாக பாகிஸ்தானை விமர்சித்தார். இந்த நிலையில், சுஷ்மா சுவராஜின் பேச்சை விமர்சித்துள்ள சீன ஊடகம், சுஷ்மா சுவராஜின் பேச்சு ஆணவம் மிக்கது என்று தெரிவித்துள்ளது. 

சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:- “ பாகிஸ்தானில் பயங்கரவாதம் இருப்பது உண்மைதான். ஆனால், பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது அந்த நாட்டின் தேசிய கொள்கையா? பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம் பாகிஸ்தான் பெறும் இலாபம் என்ன? பணமா அல்லது கவுரமா? கடந்த சில ஆண்டுகளாக  பொருளாதார வளர்ச்சி  மற்றும் வெளியுறவுதுறையில் கனிசமான வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இந்தியா இவ்வாறு ஆணவத்துடன் பேசி வருகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்