அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை

ஆண்டு தோறும் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

Update: 2017-09-27 23:12 GMT
வாஷிங்டன்

வருகின்ற 2018 ஆம் ஆண்டில் 45,000 நபர்களை மட்டும் அகதிகளாக அனுமதிக்க உச்சவரம்பு நிர்ணயித்து அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த எண்ணிக்கை 1980 ஆம் ஆண்டிலிருந்து அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு குறைவானதாகும். 

”அமெரிக்காவின் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கும் அதிபர் டிரம்ப் தான் பதவியேற்றதிலிருந்து இந்த எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உலகளவில் மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கென்று குறிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையான 75,000 தோடு ஒப்பிடும்போது இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அளவு ஏறக்குறைய சரிபாதியாகும். கண்டங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையும் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து 19,000, கிழக்கு ஆசியாவிலிருந்து 5,000, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து 2,000 லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கு 1,500 மத்திய கிழக்கு மற்றும் தென் ஆசியாவிலிருந்து 17,500 பேர்கள் அகதிகளாக அமெரிக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

அகதிகளை அனுமதிக்க இப்போதிருக்கும் நடைமுறையில் ஏற்படும் சுணக்கங்களை களையவும் கூட இந்த நடவடிக்கை உதவும் என்று நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்