“ஈழத்தமிழர் தாயகத்தில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும்” ஜெனீவா கூட்டத்தில், வைகோ பேச்சு

ஜெனீவாவில் நடந்து வரும் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசிய உரை:-

Update: 2017-09-27 23:41 GMT
ஜெனீவா, 

இலங்கைத் தீவில் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி, போரில் உயிர் நீத்த குடும்பங்களின் பிள்ளைகளான சிறுமிகளின் மறுவாழ்வு இல்லம் அமைந்துள்ள செஞ்சோலையில், இலங்கை ராணுவத்தின் விமானப்படை நடத்திய குண்டுவீச்சில், 61 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 170 பேர் படுகாயம் அடைந்தனர்.

மனித உரிமைகளுக்கான சர்வதேச மாநாடு திட்டவட்டமாக தெரிவிப்பது என்னவென்றால், சுய நிர்ணய உரிமையை மறுப்பதே மனித உரிமை மீறல் ஆகும் என்பது தான். அத்துடன், திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்று, மனித உரிமைகள் மொத்தமாக நசுக்கப்பட்டு, யுத்த காலத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டு பெருங்கூட்டமாக அகதிகள் ஆவதும், காணாமல் போவது குறித்தும் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. ஈழத்தமிழர் தாயகத்தில் இருந்து இலங்கை ராணுவத்தையும், இலங்கை குடியேற்றங்களையும் வெளியேற்றிவிட்டு, ஐ.நா.மன்றம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்