சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மிகப்பெரிய எண்ணெய் வயல் மீட்பு

சிரியா நாட்டில் யூப்ரடீஸ் ஆற்றின் கிழக்கு கடற்கரையோரம், அல் மயாடின் நகருக்கு வடக்கில் 10 கி.மீ. தொலைவில் அல் உமர் எண்ணெய் வயல் உள்ளது.

Update: 2017-10-22 21:30 GMT
பெய்ரூட்,

சிரியா நாட்டில் யூப்ரடீஸ் ஆற்றின் கிழக்கு கடற்கரையோரம், அல் மயாடின் நகருக்கு வடக்கில் 10 கி.மீ. தொலைவில் அல் உமர் எண்ணெய் வயல் உள்ளது. இது சிரியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களில் ஒன்றாகும்.

இந்த எண்ணெய் வயல், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பிடியில் இருந்து வந்தது.

இந்த எண்ணெய் வயலை மீட்டெடுப்பதற்காக, எஸ்.டி.எப். என்று அழைக்கப்படுகிற அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்து மற்றும் அரபு போராளிகள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர்.

இந்த சண்டையின்போது, அமெரிக்க கூட்டுப்படைகள் கடுமையான வான்தாக்குதலை நடத்தின.

இதன்பயனாக அந்த எண்ணெய் வயலை இப்போது எஸ்.டி.எப். படையினர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்டு விட்டனர்.

சிரியாவில் யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கு பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து அமெரிக்க கூட்டுப்படையினரும், ரஷிய படைகளும் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்