வடகொரியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்ப சீன அரசு முடிவு

வடகொரியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்ப சீன அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2017-11-15 06:35 GMT
பெய்ஜிங்,

வடகொரியா உலகநாடுகளின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாது தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகளை  ஒன்று திரட்டி ஆதரவு பெறும் முயற்சியில் தீவிரமாக டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் போது இந்த முயற்சிகளை மேற்கொண்டார். 

சீனா பயணம் மேற்கொண்ட டொனால்டு டிரம்ப், அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கிடம், வடகொரியாவுக்கு எதிராக விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

இந்த நிலையில், வடகொரியாவுக்கு சிறப்பு தூதரை அனுப்ப சீன அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு தூதர் சாங் டோ, வடகொரியாவுக்கு செல்ல உள்ளார். ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் இது குறித்து சீன தரப்பில் வெளியிடப்படவில்லை. 

வடகொரியாவின் நட்பு நாடாக சீனா அறியப்படுகிறது. மிகப்பெரிய வர்த்த கூட்டாளியாகவும் சீனா திகழ்கிறது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு கேபினட் அந்தஸ்துடன் உள்ள ஒரு சீன அதிகாரி வடகொரியாவுக்கு செல்வது இதுதான் முதல்தடவையாகும். 

மேலும் செய்திகள்