அமெரிக்க ராணுவ முகாம்களில் கடந்த ஆண்டு 6 ஆயிரம் பாலியல் தாக்குதல்கள் நடந்து உள்ளது

அமெரிக்க ராணுவ முகாம்களில் கடந்த் ஆண்டு 6 ஆயிரம் பாலியல் தாக்குதல்கள் நடந்து உள்ளது, அமெரிக்க இராணுவம் முதல் தடவையாக ஆவணங்களை வெளிப்படுத்தி உள்ளது.

Update: 2017-11-18 10:43 GMT
வாஷிங்டன்

அமெரிக்க இராணுவம் முதல் தடவையாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்தியது.

வெர்ஜீனியாவில் உள்ள கடற்படை நிலையம் நோர்போக் மற்றும் தென் கொரியா போன்ற வெளிநாடுகளில் உள்ள   பெரிய இராணுவ மையங்களில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் துஷ்பிரயோகம் நடந்து உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இராணுவத்தில் பாலியல் தாக்குதல் இது கற்பழிப்புக்கு ஏதுவானது என்று வரையறுக்கப்படுகிறது. இது அறிக்கையை விட அதிகாம இருக்கலாம் என கூறப்படுகிறது.

2016 இல் , பாலியல் தாக்குதல் நடத்திய சேவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருப்பதாக பென்டகன் மதிப்பிட்டுள்ளது. ஆனால், முந்தைய ஆண்டுகளில் இருந்து அறிக்கையிடுவதில் இது முன்னேற்றம் கண்டுள்ளது என  பென்டகன் கூறி உள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட தரவுப்படி, தென் கொரியாவில் உள்ள அமெரிக்க தளங்களில்  211  பாலியல் தாக்குதல் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. நோர்போக் 2016 ஆண்டில்   270 பாலியல் தாக்குதல் நடந்ததாக கூறுகிறது. 2015 ஆம் ஆண்டில் நோர்போக்கில் 291 வழக்குகள் இருந்து உள்ளது.

2016 ஆம் ஆண்டு  டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட்  199 பாலியல் தாக்குதல்கள் , கலிபோர்னியா, சான்டியா கோவிலுள்ள கடற்படை தளம்,  187 பாலியல் தாக்குதல்கள் ; வட கரோலினாவில் முகாம்  ஜூன் 169 தாக்குதல்கள் , கலிபோர்னியாவில் முகாம் பெண்டில்டன், 157 தாக்குதல்கள்  மற்றும் வடக்கு கரோலினாவில் ஃபோர்ட் பிராக் 146 தாக்குதல் பதிவாகி இருப்பதாக ஆவனங்கள் குறிபிடுகின்றன.

பென்டகன் இந்த ஆண்டு முன்னதாக மொத்தம் 6,172 பாலியல் தாக்குதல் அறிக்கைகள்  அறிவித்துள்ளது.

2016 ல் மொத்தம் 6,172 பாலியல் தாக்குதல் நடந்து உள்ளதாக பென்டகன் கூறுகிறது. கடந்த வருடம் 6082 பாலியல் தாக்குதல்கள் பதிவாகி இருந்தன. இது 2012 ல்  3,604 வழக்குகள் பதிவாகியுள்ளதில் இருந்து அதிகரித்துள்ளது.

14,900  உறுப்பினர்கள் 2014 ஆம் ஆண்டில்  பல்வேறு பாலியல் தொல்லைகளை சந்தித்து உள்ளனர். 2014 ஆம் ஆண்டு 20,300 பேரில் இருந்து குறைந்து உள்ளது.

மேலும் செய்திகள்