காஷ்மீர் சுதந்திரத்திற்கு பணியாற்றுவேன் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் சபதம்

காஷ்மீர் சுதந்திரத்திற்கு பணியாற்றுவேன் என விடுதலை செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறிஉள்ளான்.

Update: 2017-11-22 16:10 GMT
லாகூர்,


ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ்சயீத்தின் தலைக்கு அமெரிக்கா ரூ.64 கோடி பரிசு அறிவித்து இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தான். அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் அரசு அமைந்ததும், அவனை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. இப்போது பாகிஸ்தான் அரசு அவனை வீட்டுக்காவலில் வைக்க லாகூர் கோர்ட்டு அனுமதி மறுத்துவிட்டது.

 ‘எந்த வழக்குகளிலும் ஹபீஸ்சயீத்துக்கு தொடர்பு இல்லாத நிலையில் அவரை ஏன்? வீட்டுக்காவலில் வைக்க வேண்டும். உடனடியாக விடுவிக்க வேண்டும்’  என கேள்வி எழுப்பி உள்ளது. இதனையடுத்து அவன் நாளை வியாழன் கிழமை விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் சுதந்திரத்திற்கு பணியாற்றுவேன் என விடுதலை செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறிஉள்ளான்.

லாகூர் கோர்ட்டு உத்தரவை அடுத்து ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

 அதில் தன்னை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்து உள்ளதற்கு இந்தியா தான் காரணம் என குற்றம் சாட்டிஉள்ளான் ஹபீஸ் சயீத். மற்றும் காஷ்மீர் சுதந்திரத்திற்காக பணியாற்ற போவதாக சபதமிட்டு உள்ளான். இது பாகிஸ்தான் சுதந்திரத்தின் வெற்றியாகும், கடவுளின் விருப்பமாகும். காஷ்மீருக்காக நான் போராடுகின்றேன், எனவே காஷ்மீரும் சுந்திரம் அடையும். காஷ்மீருக்காக நான் போராடுவதால் இந்தியா என்னல் குறிவைக்கிறது, இந்தியாவுடயை நடவடிக்கை வீணாகும். எனக்கு உதவுமாறு கடவுளின் பிரார்த்தனை செய்கிறேன். பாகிஸ்தான் சுதந்திரம் மற்றும் காஷ்மீர் சுதந்திரத்திற்கு ஜமாத் உத் தவா உறுப்பினர்களால் வலுவான பணியை ஆற்ற முடியும் என கூறிஉள்ளான் ஹபீஸ் சயீத்.

மேலும் செய்திகள்