கனடா தொழில் அதிபர், மனைவி மர்மச்சாவு பிரதமர் அனுதாபம்

கனடாவை சேர்ந்தவர் பேரி ஷெர்மேன். பொது மருந்து தொழில் அதிபர். இவரது ‘அபோடெக்ஸ்’ மருந்து நிறுவன தயாரிப்புகள், உலகமெங்கும் விற்பனை ஆகின்றன.

Update: 2017-12-16 23:15 GMT

டொராண்டோ,

கனடாவை சேர்ந்தவர் பேரி ஷெர்மேன். பொது மருந்து தொழில் அதிபர். இவரது ‘அபோடெக்ஸ்’ மருந்து நிறுவன தயாரிப்புகள், உலகமெங்கும் விற்பனை ஆகின்றன. இவரது நிறுவனம், உலகளவில் மருந்து வர்த்தகத்தில் 7–வது இடத்தில் உள்ளது. இவரது மனைவி ஹனி. டொராண்டா நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி டேவிட் ஹாப்கின்சன் கூறும்போது, ‘‘அவர்கள் மரணம் அடைந்துள்ள விதம் மர்மமாக உள்ளது. அந்தக் கோணத்தில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனடாவின் மிகப்பெரும் பணக்காரராக விளங்கி வந்த பேரி ஷெர்மேன், மிகப்பெரிய நன்கொடையாளராகவும் திகழ்ந்து வந்தார்.

இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

பேரி ஷெர்மேன், ஹனி தம்பதியரின் மறைவுக்கு அந்த நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ருதியு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்