அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றம் தொடர்கிறது பாகிஸ்தான் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதி உதவி உள்ளிட்ட அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது.

Update: 2018-01-12 22:00 GMT
இஸ்லாமாபாத்,

பயங்கரவாத ஒழிப்பில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதி உதவி உள்ளிட்ட அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது. இது பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக, இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு, உளவு தகவல்கள் பகிர்வு ஆகியவற்றை நிறுத்தி வைக்கப்போவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இது இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல், இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “தகவல் தொடர்பு வழிகளை அமெரிக்காவும், பாகிஸ்தானும் மூடி விடவில்லை. தொடர்ந்து திறந்து தான் வைத்து உள்ளன. ஒத்த ஆர்வம் உடைய பல்வேறு பிரச்சினைகளில், இரு தரப்பும் பரஸ்பரம் தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு தான் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்