உலகைச்சுற்றி...

* அமெரிக்காவுடன் நல்லுறவை பராமரிக்க விரும்புவதாக பாகிஸ்தான் ராணுவ மந்திரி குர்ரம் தஸ்தகீர் கான் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-02-02 21:30 GMT
* பாகிஸ்தானின் உள்பகுதியில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் ஈடுபடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை அமெரிக்கா மறுத்து உள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக் கென்சீ, அந்த எண்ணமே எழவில்லை என்றும், பயங்கரவாதிகள் ஒழிப்பில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை நாடுவதாகவும் கூறினார்.

* அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பள்ளிக்கூடம் ஒன்றில் 12 வயதே ஆன மாணவி துப்பாக்கிச்சூடு நடத்தியது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய மாணவி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

* தென் ஆப்பிரிக்காவில் திடீர் மின்வெட்டால், ஒரு தங்க சுரங்கத்தில் பாதாளத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் 24 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்த சம்பவம் நடந்து உள்ளது. மின்சார வினியோகம் சீரானதை தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை முழுவீச்சில் நடந்தது.

* பாகிஸ்தானும், ரஷியாவும் வர்த்தகம், எரிசக்தி, ராணுவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முன்வந்து உள்ளன.

மேலும் செய்திகள்