‘பாகிஸ்தான் புனிதர்களின் பூமி’ பிரதமர் அப்பாசி சொல்கிறார்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.

Update: 2018-02-24 22:15 GMT

இஸ்லாமாபாத்,

தலீபான், அல்கொய்தா, ஹக்கானி வலைச்சமூகம் என பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் மண்ணை தலைமையகமாக கொண்டு செயல்படுகின்றன என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி, இந்த பயங்கரவாத இயக்கங்களை பாகிஸ்தான் அரசு பாரபட்சமின்றி ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கம் என்பதை அந்த நாட்டின் பிரதமர் அப்பாசி திட்டவட்டமாக மறுக்கிறார்.

லாகூரில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த இலக்கிய விழாவில் அவர் இதுகுறித்து குறிப்பிட்டார்.

அப்போது அவர், ‘‘பாகிஸ்தானைப் பற்றிய மேற்கத்திய நாடுகளின் பார்வை தவறானது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பூமி அல்ல. இது புனிதர்களின் பூமி’’ என்று கூறினார்.

மேலும், ‘‘பாகிஸ்தான் கலாசார பெருமை கொண்டது; புனிதர்களின் போதனைகள் இந்த மண்ணில் உண்டு’’ என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், ‘‘இந்த விழாவில் பங்கேற்று உள்ள வெளிநாட்டினர் இங்கிருந்து அன்பை சுமந்து செல்லலாம்’’ என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்