இயேசு கிறிஸ்து உயிர் பிரிந்த இடத்தில் உள்ள பழங்கால தேவாலயம் மூடல்

வரி பிரச்சனைக் காரணமாக இயேசு கிறிஸ்து உயிர் பிரிந்த இடத்தில் உள்ள பழங்கால ஹோலி சீபுல் தேவாலயம் மூடபட்டது.#Holysepulchre #Jerusalem post

Update: 2018-02-25 12:24 GMT
ஜெருசலேம்,

இஸ்ரேலிய அரசின் புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணியளவில் (உள்நாட்டு நேரத்தின் படி) சீபுல் தேவாலயம்  மூடப்பட்டதாக தேவாலய நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

 தெளிவாக எவ்வளவு காலத்திற்கு தேவாலயம் மூடப்படும் என்பதை உடனடியாக கூற இயலாது என கிறிஸ்தவ அதிகாரிகள் செய்திக்கூட்டமைப்பில் கூறியுள்ளனர். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்து, பின் புத்துயிர் பெற்றதாகவும், தேவாலயம் ஒரு புனித தலமாகவும் கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்