மியான்மரில் ராணுவம் மற்றும் பழங்குடியின பிரிவினரிடையே மோதல்; 19 பேர் பலி

மியான்மர் ராணுவம் மற்றும் பழங்குடியின பிரிவினரிடையே இன்று நடந்த மோதலில் 19 பேர் பலியாகி உள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். #MyanmarArmy

Update: 2018-05-12 08:18 GMT

யாங்கன்,

சீன எல்லை அருகே மியான்மர் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றன.  இந்த நிலையில், மியான்மர் நாட்டு ராணுவத்திற்கும் மற்றும் டாங் தேசிய விடுதலை ராணுவம் என்ற ஊடுருவலல் குழுவுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.

மியான்மரில் ராகீன் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் இனஅழிப்பு முயற்சியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது.  எனினும், ராணுவத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு ராணுவ தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே என 3 இடங்களில் ராணுவத்திற்கும், ஊடுருவல் குழுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர்.  12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்