உலகைச்சுற்றி...

*அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயது மாணவன் படுகாயம் அடைந்தான்.

Update: 2018-05-13 00:30 GMT
* அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் சர்வதேச வான்வழியில் 2 ரஷிய போர் விமானங்களை 2 அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

* எகிப்து அரசு பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்க தவறி விட்டதாக தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த அமல் பதி என்ற பெண் விமர்சித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

* சிரியா மீது இஸ்ரேல் கடந்த வியாழன் அன்று நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 11 ஈரானியரும் அடங்குவர். இதே போன்று சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

* வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக வாக்குறுதி அளித்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வடகொரியாவை மறு கட்டமைப்பு செய்வதற்கு உதவ தயார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்து உள்ளார்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயது மாணவன் படுகாயம் அடைந்தான். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.

மேலும் செய்திகள்