எஜமானரை துப்பாக்கியால் சுட்ட நாய

அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நாயின் கால் தவறுதலாக துப்பாக்கியின் மீது பட்டதில், எஜமானிக்கு குண்டு காயம் ஏற்பட்டது.

Update: 2018-05-14 06:09 GMT
வாஷிங்டன்

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி (51). இவர் லாப்ராடார் இனத்தைச் சேர்ந்த பாலே என்ற நாயை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.

சம்பவத்தன்று ரிச்சர்ட் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சோபாவில் அமர்ந்திருந்த ரிச்சர்ட்டின் மடி மீது பாலே ஏறிக் குதித்து விளையாடியுள்ளது. இதில், அவர் இடுப்பு பெல்டில் வைத்திருந்த 9 எம்.எம். ரக துப்பாக்கி வெளியே விழுந்துள்ளது.

விளையாட்டாக அந்தத் துப்பாக்கியை எடுத்தது பாலே. அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து, ரிச்சர்ட்டின் உடலில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக அவர் அவசர உதவி மையத்தின் எண்ணான 911க்கு கால் செய்தார். அதில் பேசிய நபரிடம், 'தன்னை நாய் சுட்டு விட்டது. காப்பாற்றுங்கள்' என ரிச்சர்ட் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி, பின்னர் ரிச்சர்ட்டை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்.

அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறும் அமெரிக்காவில், வளர்ப்பு நாயால் எஜமானி சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்