85 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் படிமங்கள் கண்டு பிடிப்பு

மெக்ஸிகோவில் உள்ள பாலைவனத்தில் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. #dinosaur

Update: 2018-06-13 15:04 GMT
மெக்சிகோ,

மெக்சிகோவின் கொஹிலா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் சுமார் 85 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அங்குள்ள பாலைவன அருங்காட்சியகத்தில் டைனோசர் படிமங்களை கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியில்  (அகந்தொலிபான்) என்ற புதிய வகை டைனோசர் அறியப்பட்டுள்ளது.  இந்த டைனோசர்  தாவர உண்ணி என்றும் தெரிவித்துள்ளனர்.   

அதன் எலும்புகள் கொஹுய்லாவில் உள்ள டெசர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இதனையடுத்து பறக்கும் மற்றும் ஊர்வ வகை டைசோனர்கள், இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆராயும் பணியில் ஈடுபட போவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்