உலகைச்சுற்றி...

* வடகொரியாவுடனான அமெரிக்க ஒப்பந்தம், சீனாவுக்கு நல்லதாக அமையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

Update: 2018-06-15 22:00 GMT
* சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீன கடற்படை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது 3 ஆளில்லா விமானங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தி சோதித்து உள்ளது.

* இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜார்ஜ், திவ்யா என்ற தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகள். ஆனால் இந்த மகள், உடல் நலக்குறைவால் ஒரு வயது குழந்தை போல தோற்றம் அளிப்பவள். இந்த மகளுடன், அவளது பெற்றோர் மலேசியாவின் புக்கெட் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் பறக்க சிங்கப்பூர் ஸ்கூட் ஏர்லைன்ஸ் அனுமதிக்க மறுத்துவிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* லிபியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அல் கொய்தா பயங்கரவாதி ஒருவர் பலி ஆனார்.

* ஏமனில் ஹூதைதா துறைமுக நகரை பிடிப்பதற்கான தாக்குதலில் ஈடுபட்டு வருகிற சவுதி கூட்டுப்படையினர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி பணி அனுமதி வழங்கி முந்தைய ஒபாமா நிர்வாகம் ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தற்போதைய டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இதில் உறுதியாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

மேலும் செய்திகள்