வடகொரியாவின் முக்கிய கூட்டாளி சீனா தான் - வடகொரிய ஜனாதிபதி

வடகொரியாவின் முக்கிய கூட்டாளி சீனா தான் என்றும், அந்நாட்டுக்கு எதிராக வடகொரியா செயல்படாது எனவும் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

Update: 2018-06-21 11:15 GMT

சிங்கப்பூரில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்புக்கு பின்னர் நாடு திரும்பிய கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்றார்.அங்கு இருநாட்கள் தங்கியிருந்தவர் ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார்.

இப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று வடகெடாரியாவுக்கு புறப்பட்டார்.இந்நிலையில், சீனா தான் தங்களின் முக்கிய கூட்டாளி என்றும் சீனாவின் நலனுக்கு எதிராக வடகொரியா செயல்படாது எனவும் அறிவித்துள்ளார். மேலும் இதை சீன ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்