மலைப்பாம்புக்குள் இளம்பெண்ணின் உடல்! மனிதரை எப்படி விழுங்குகிறது

ஒரு மனிதரை முழுமையாக மலைப்பாம்பு எப்படி விழுங்கும் என்பது குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-06-21 12:29 GMT
இந்தோனேசியா நாட்டில் வா திபா (54) எனும் பெண்ணொருவர் தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பவில்லை என அவரது உறவினர்களுக்கு தெரிய வந்தது.அதன் பின்னர், சுமார் 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஒரே இடத்தில் நகர முடியாமல் இருந்துள்ளது. அதனைப் பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள், அதனை அடித்து கொன்றுவிட்டு அதன் உடலை அறுத்துள்ளனர்.

அப்போது காணாமல் போன வா திபாவின் உடல் அதில் இருந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மனிதரை முழுவதுமாக மலைப்பாம்பு எப்படி விழுங்க முடியும் என்பது குறித்த சந்தேகம் பலருக்கு நிலவுகிறது.இந்நிலையில், இதற்கு ஆய்வாளர்களை விடையளித்துள்ளனர். மலைப்பாம்பிற்கு பெரிய இரைகளை முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு நெகிழ்வான தாடை உள்ளது. மனிதர்களின் தோல்பட்டை எளிதில் உடையாது என்பதால், தோல்பட்டைக்கு மேல் மனிதர்களின் உடல் மலைப்பாம்பின் வாய்க்கு உள்ளே செல்வது கடினம்.ஆனால், மனிதர் ஒருவர் மலைப்பாம்பிடம் சிக்கும்போது, அவரை சுற்றி முறுக்கி நசுக்கும். இதனால் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார். அதன் பிறகு, அந்நபரை முழுவதுமாக விழுங்கும்.

பெரும்பாலான மலைப்பாம்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவையாகும். எனவே இவை அரிதாகவே முதலைகள் போன்ற ஊர்வனவற்றை சாப்பிடும். மலைப்பாம்புகள் முதலில் எலி போன்ற சிறிய வகை விலங்குகளை உண்ணும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு, எலிகளை அவை குறி வைக்காது. இதற்கு காரணம் எலிகளிடம் இருந்து கிடைக்கும் கலோரிகள் அவற்றுக்கு போதாது என்பதேயாகும்.

மலைப்பாம்புகளைப் பொறுத்தவரை, அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்றவாறே தனது இரையை தேர்வு செய்யும். எனவேதான் பன்றி, மாடு போன்ற விலங்குகளை அவை வேட்டையாடும். மலைப்பாம்பு தனக்கு ஏற்ற பெரிய இரை கிடைக்கவில்லை என்றால், பெரிய இரைக்காக நீண்ட காலம் காத்திருக்கும். அக்காலத்தில் சிறிய இரையை உண்டு உயிர் வாழும். மலைப்பாம்புகள் தனது இரையை முழுவதுமாக உண்பவையாகும். இந்த தகவல்களை மலைப்பாம்பு குறித்த ஆராய்ச்சியாளர் மேரி-ரூத் லோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்