இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது சீனா நிதி உதவி செய்ததா? ராஜபக்சே மறுப்பு

இலங்கையில் 2015–ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.

Update: 2018-07-01 22:30 GMT

கொழும்பு,

அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது பிரசாரத்திற்காக சீனா சுமார் ரூ.51 கோடி நிதி உதவி செய்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் கடந்த வாரம் செய்தி வெளியானது. இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக தனது மவுனத்தை கலைத்த ராஜபக்சே தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார்.

இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிபர் தேர்தல் பிரசாரத்திற்காக சீனா எனக்கு நிதி உதவி செய்யவில்லை. எனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பிரசார உதவியாளர்கள் பணம் பெற்றதாக வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்