உலகைச்சுற்றி...

34 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.2.31 லட்சம் கோடி) சீன பொருட்களுக்கு அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது

Update: 2018-07-07 00:00 GMT
* கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 18 ஆண்டுகளுக்கு முன் உள்ளூர் பெண் நிருபர் ஒருவரிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. ஆனால் தான் தவறாக நடந்து கொண்டதாக தோன்றவில்லை என்ற போதிலும் அந்தப் பெண்ணிடம் அந்த காலகட்டத்திலேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டு விட்டதாக ட்ரூடோ இப்போது மனம் திறந்து உள்ளார்.

* தாய்லாந்து நாட்டில் புக்கெட் தீவில் சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சீன பயணி ஒருவர் பலி ஆனார். 56 பயணிகளை காணவில்லை. 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

* தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் பெருகி வருவது, அந்த பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு காரணமாகி விடும் என்று நியூசிலாந்து கருத்து தெரிவித்து உள்ளது.

* துருக்கியில் 2016-ம் ஆண்டு நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் தொடர்புடையவர்களாக கருதப்படுகிற 271 படை வீரர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி ஸ்காட் புரூட் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அவர் பதவி விலகி உள்ளார்.

* 34 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.2.31 லட்சம் கோடி) சீன பொருட்களுக்கு அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.

மேலும் செய்திகள்