உலகின் அதிக நீளம் கொண்ட விரல் நகங்களை 66 வருடங்களுக்கு பின் வெட்டும் இந்தியர்

உலகின் அதிக நீளமான விரல் நகங்களை கொண்ட இந்தியர் ஒருவர் 66 வருடங்களுக்கு பின் அவற்றை வெட்டுகிறார்.

Update: 2018-07-11 08:39 GMT

நியூயார்க்,

மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (வயது 82).  கடந்த 1952ம் ஆண்டில் இருந்து தனது இடது கையில் உள்ள விரல் நகங்களை அவர் வெட்டுவதில்லை.  இதனால் அது வளர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில், ஒரு கையில் நீண்ட விரல் நகங்களை கொண்ட நபர் என்ற பெருமையுடன் கடந்த 2016ம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

அவரது மொத்த விரல் நகங்களின் நீளம் 909.6 சென்டி மீட்டர்கள்.  இதில் பெருவிரல் நகம் 197.8 சென்டி மீட்டர்களுடன் அதிக நீளம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் தனது விரல் நகத்தினை வெட்டுவதற்கு அவர் முன்வந்துள்ளார்.  அவரை ரிப்ளீஸ் பிலீவ் இட் ஆர் நாட் மியூசியம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளது.

டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள இந்த மியூசியத்தில் சில்லாலின் நகங்களை வெட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.  அந்த மியூசியத்தில் அவரது நினைவாக நகங்கள் வைக்கப்படும்.

மேலும் செய்திகள்