உயிருடன் இருப்பேனா! கொடூரமாக குற்றுயிராக விடப்படுவேனா! துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ

உயிருடன் இருப்பேனா அல்லது அதைவிட கொடூரமாக குற்றுயிராக விடப்படுவேனா தெரியாது என துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ.

Update: 2018-07-16 12:25 GMT

துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார்.

ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிபா துபாயில் இருந்து தப்பித்துள்ளார். ஆனால் அவரது திட்டம் குறித்த தெரியவந்த துபாய் அரச குடும்பம் துரிதமாக செயல்பட்டு சர்வதேச கடற்பகுதியில் வைத்து இளவரசியை மீண்டும் துபாய் நாட்டுக்கே கொண்டு சென்றது.

அதன்  பின்னர் இளவரசி லதிபா தொடர்பில் எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் இளவரசி லதிபா பதிவு செய்த 40 நிமிட வீடியோ  ஒன்றை மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தற்போது வெளியிட்டுள்ளது. அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. தாம் தொடர் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும், உயிருடன் இருப்பேனா அல்லது அதைவிட கொடூரமாக குற்றுயிராக விடப்படுவேனா தெரியாது என கூறி உள்ளார்.

இளவரசி லதிபா தப்பிச்செல்ல உதவிய அவரது பெண் நண்பர் மற்றும் பிரான்ஸ் முன்னாள் உளவாளி என இருவரும் தற்போது துபாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் எழும் அழுத்தமே இளவரசி லதிபா தொடர்பான துபாய் அதிகாரிகளை உண்மை நிலையை வெளிப்படுத்த வைக்கும் என இளவரசி லதிபாவின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்