வினோத காட்சி: பறக்கும் பெரிய கழுகை எதிர்த்து தாக்கும் சிறிய பறவை

விசித்திர காட்சியாக சிறிய ஆனால் துணிவுடைய பறவை ஒன்று பெரிய கழுகு மேல் அமர்ந்து சவாரி செய்தபடி தாக்கும் காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2018-07-20 11:43 GMT
தைபே

சிறிய கருப்பு டிராங்கோ பறவை ஒன்று 5 அடி உள்ள விங்ஸ்பன் கழுகின் தலையின்பின்புறமாக அமர்ந்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞரான லியு சியா-பின் புகைபடமாக எடுத்து உள்ளார்.

ஆசியாவில் தைவான், தைப்பியில் ஒரு  கிளையில் அமர்ந்த கழுகு, ஒன்று பாம்பை சாப்பிட முயற்சித்தது. அதை புகைப்படம் எடுத்து உள்ளார். அப்போது சிறிய  கருப்பு டிராங்கோ பறவை ஒன்று கழுகின் கழுத்து பகுதியில்  வந்து அமர்ந்து அதனை தாக்கி உள்ளது.  அந்த பறவையுடன் கழுகு பறந்து உள்ளது. இதனை புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்து உள்ளார்.

சிறிய பிறவையாக இருந்தாலும் அது தனது எதிர்ப்பை காட்டி உள்ளது. நானும் இந்த காட்சியை எதிர்பார்க்கவில்லை என புகைப்பட கலைஞர் கூறி உள்ளார்.



இந்த கருப்பு டிராங்கோ  ஒரு சிறிய ஆசிய பறவை, பொதுவாக இந்தியா, ஈரான் மற்றும் இலங்கை நாடுகளில்  காணப்படும். அவைகள் 28 செமீ நீளம் மட்டுமே வளரும் ஆனால் பெரிய பறவைகள் நோக்கி ஆக்கிரமிப்புடன் செயல்படும்  தங்கள் போக்கு காரணமாக, அவைகளுக்கு "ராஜா காகம்" என்ற புனைப்பெயரும் உண்டு.

குருத்தெலும்பு பாம்பு கழுகுகள் பொதுவாக ஆசியாவின் காடுகளில் காணப்படுகின்றன மற்றும் பாம்புகளை சாப்பிடுகின்றன.

மேலும் செய்திகள்