குறுந்தகவல்

சுவீடன் நாட்டில் இருக்கும் ரத்த சேமிப்பு வங்கிகள், ஒரு புதுமையான வழிமுறையை கடைப்பிடிக்கின்றன.

Update: 2018-08-04 11:27 GMT
சுவீடன் நாட்டில் கொடையாளிகளின் ரத்தத்தை வாங்கி சேமித்துக்கொள்வதுடன், அவர்களது அலைபேசி எண்களையும் பத்திரமாக பதிவு செய்து வைத்துக்கொள்கிறார்கள். எதற்காக தெரியுமா...?

கொடையாளிகளின் ரத்தம் அவசர காலத்தில் உபயோகப்படும்போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதனால் ஒரு உயிரை காப்பாற்றிய மனநிறைவோடு, மீண்டும் மீண்டும் ரத்த தானம் செய்வார்களாம்.

அதேசமயம் அவர்கள் கொடுத்த ரத்தம் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படாவிட்டாலும், ‘மன்னிப்பு’ செய்தி அடங்கிய குறுந்தகவல்களை அனுப்புகிறார்கள். 

மேலும் செய்திகள்