வடக்கு அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #AlaskaEarthquake

Update: 2018-08-13 01:12 GMT
வாஷிங்டன்,

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. 

கடந்த 1995 ஆம் ஆண்டு வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவுக்கோலில் 5.2 என்ற அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்நிலநடுக்கமே சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படுகிறது. இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்