உலகைச்சுற்றி....

ஏமனில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தைகள் பயணம் செய்த பஸ் மீது சவுதி கூட்டுப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

Update: 2018-08-14 22:45 GMT

*தென்கொரியாவில் 2022-ம் ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மூன் ஜே இன்னுக்கு எதிராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தவர் ஆன் ஹீ ஜங். இவர் தனது பெண் உதவியாளரை பல முறை கற்பழித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சியோல் மேற்கு மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

*ஏமனில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக குழந்தைகள் பயணம் செய்த பஸ் மீது சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய இறுதி விவரத்தை செஞ்சிலுவை சங்கம் நேற்று வெளியிட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 51 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 40 பேர் குழந்தைகள் எனவும் அது கூறியது.

* அமெரிக்க எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, தங்கி இருந்த புகாரின்பேரில் இந்தியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை அந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.

* இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கடந்த மே மாதம் எகிப்துக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா அல் சிசியை சந்தித்து, காசா எல்லையில் நீண்டகால சண்டை நிறுத்தம் கொண்டு வருவது பற்றி விவாதித்தார் என இப்போது தகவல்கள் கசிந்து உள்ளன.

மேலும் செய்திகள்