ஆப்கானிஸ்தானில் உளவுத்துறை பயிற்சி மையம் மீது துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறை பயிற்சி மையம் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தினர். #KabulAttack

Update: 2018-08-16 08:16 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த அனைவரும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை காபூலில் உள்ள உளவுத்துறை பயிற்சி மையம் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனிடையே ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும், துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பலுக்கும் மோதல் நடந்து கொண்டிருப்பதாக காபூல் போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹஷ்மட் ஸ்டான்க்‌ஷய் கூறியுள்ளார்.  

மேலும் செய்திகள்