ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவு

ஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் 80 வயதில் காலமானார்.

Update: 2018-08-18 10:41 GMT

முன்னாள் ஐ.நா. சபை  தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான  கோபி அன்னான்  தனது 80 வயதில் இன்று காலமானார்.  நோய்வாய்பட்டு இருந்த  கோபி அன்னன் மறைவு செய்தியை  கோபி அன்னான் அறக்கட்டளை அதன் டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டு உறுதி படுத்தி உள்ளது.

அன்னான் உலகின் முதல் தூதராக பதவி வகித்த முதல் கருப்பு ஆப்பிரிக்கர் ஆவார், இவர் 1997 முதல் 2006 வரை இரண்டு முறை பணியாற்றினார். அவர் பின்னர் ஐ.நா. சிறப்பு தூதராக பணியாற்றினார். பின்னர் அவர் முரண்பாடு நிறைந்த சிரியாவுக்கு அவர் ஐ.நா வின் சிறப்பு தூதராக பணியாற்றினார்.2001 ஆம் ஆண்டு நோபல் அமைதிக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

கோபி தன்னுடைய கானா நாட்டினைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகளின் சபையில் ஏழாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

தன்னுடைய பதவி காலத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை சிறப்பாக செய்ததன் விளைவாக அவருக்கு 2001ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் கூட சிரியாவில் நடைபெற்ற போர் குறித்து ஆய்வு செய்து பல முக்கியமான முடிவுகளை முன்னெடுக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்