பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2018-08-29 10:53 GMT

பசிபிக் பெருங்கடலில் 7.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனை அடுத்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், நியூ கலேடோனியா தீவு பகுதியின் கிழக்கு கடலோரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து 0.3 முதல் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழ கூடும் என தெரிவித்துள்ளது.

இதனால் கடலோர பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  உள்ளூர் அதிகாரிகள் கூறும் அறிவுரைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

இதனால் நியூ கலேடோனியா, பிஜி மற்றும் வனுவாட்டு ஆகிய தீவு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  பிற பசிபிக் நாடுகளான மார்ஷல் தீவுகள், சமோவா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்டவற்றில் சிறிய அளவிலான அலைகள் வீச கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்