ஈராக்கில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: 5 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 11 பேர் பலி

ஈராக்கின் மேற்கே கார் ஒன்றை வெடிக்க செய்து நடந்த வெடிகுண்டு தற்கொலை தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2018-08-29 12:13 GMT

ரமடி,

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத குழுக்கள் சில இடங்களை கைப்பற்றி கொண்டு ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துகிறது.  எனினும் இதுபோன்ற தாக்குதல்களில் பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்படுகின்றனர்.

கடந்த வருடம் டிசம்பரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினரின் வசம் இருந்து மொசூல் நகரை அரசு ராணுவ உதவியுடன் மீட்டுள்ளோம் என அறிவித்தது.  இந்த நிலையில், கடந்த வருடம் நவம்பரில் ஐ.எஸ். அமைப்பினர் ஈராக்கின் மேற்கே அல் காயிம் என்ற நகரை மீண்டும் கைப்பற்றினர்.

இது பாக்தாத் நகரில் இருந்து 340 கி.மீ. தொலைவில் சிரியா நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இங்கு கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து நடந்த தற்கொலை தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.  16 பேர் காயமடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்