செவ்வாய் பயணத்தில் பாதி தூரம் கடந்த விண்கலம்

செவ்வாய்க் கிரகம் நோக்கிச் செல்லும் ‘நாசா’வின் விண்கலம் பாதி தூரத்தைக் கடந்திருக்கிறது.

Update: 2018-09-01 09:37 GMT
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது.

அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது.

அந்த விண்கலம், தற்போது மொத்த பயண தூரத்தில் பாதி தூரத்தைக் கடந்து சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதாவது, அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 107 நாட்கள் கடந்துள்ள நிலையில் சுமார் 277 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்திருக்கிறது.

இந்நிலையில் எஞ்சியுள்ள 208 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கு இன்னும் 98 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்