விண்கல்லை ஆராய அனுப்பட்ட ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியது

ஜப்பானின் ஹயமியூசா-2 விண்கலம் ரயூகு விண்கல்லை ஆராய அனுப்பட்ட ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது.

Update: 2018-09-25 07:31 GMT
ரயூகு  எனப்படும் விண்கல்லை  ஆராய்வதற்காக ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது. ஜப்பானின் ஹயமியூசா-2 ( Hayabusa-2) எனும் விண்கலமானது ஏறத்தாழ முன்றரை வருட பயணத்தின் பின் கடந்த ஜுனில் ரயூகு விண்கல்லை சென்றடைந்துள்ளது. பூமியில் இருந்து 100 மில்லியன் மைல் (160 மில்லியன் கிலோமீட்டர்) க்கும் அதிகமான இடைவெளிகளில் இது உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் இறுதியில்   இந்த விண்கல்லின் மேற்புரம் விண்கலத்தில் இருந்து  ரோபோக்களை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொள்ள உத்தேசித்தது  இவ்வகை ரோபோக்கள் ரயூகுவின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.  அதன் படி முதல் ரோவர் செப்டம்பர் 22 ந்தேதி இறக்கப்பட்டது. MINERVA-II1 ரவர்ஸ் வெற்றிகரமாக உடுக்கோள் ரயூகு  மீது இறங்கியது, வெற்றிகரமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பி உள்ளது.

இந்த டைனமிக் புகைப்படம் செப்டம்பர் 22 அன்று சுமார் 11:44   ரோவர் -1 ஏஏ மூலம் படம்பிடிக்கப்பட்டது. ரயூகு மேற்பரப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. வலது புறத்தில் வெள்ளைப் பகுதி சூரிய ஒளி காரணமாக இருப்பதால், இடது புறம் ரயூகு வின் மேற்பரப்பு ஆகும்.

இதெல்லாம் வெற்றிகரமாக நடந்தால் ஹயமியூசா-2  வே தகவல்களைப் பெறவென ரோபோக்கள் கொண்ட விண்கலத்தை தரையிறக்கும் முதல் விண்கலமாக இருக்கப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த விண்கல்லின் மேற்புறம் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. கார்பன்-நிறைந்த  ரைகு  கரடுமுரடான கறுப்பு கல் சூரியனின் ஒளியின் மூலம் ஒளிர்கிறது.

மேலும் செய்திகள்