கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது-சவுதி அரேபியா

கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது என சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-28 07:33 GMT
துபாய்

‘இரண்டு பெண் சமூக ஆர்வலர்களை சவுதி அரேபியா அரசு சிறையில் தள்ளிய விவகாரத்தில் தலையிட்ட கனடா அரசு, கடந்த ஆகஸ்டு மாதம் சவுதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது. இதனையடுத்து சவுதி அரேபியா கனடா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததுடன், விமான போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளையும் ரத்து செய்தது.

கனடா மன்னிப்பு கேட்காதவரை அந்த நாட்டின் மீதான தடையை நீக்க முடியாது என சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவரை கத்தார் நாடு மீதான தடை நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 

சவுதி, ஐக்கிய அமீரகம், பஹரின், எகிப்து ஆகிய நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கத்தார் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மனித உரிமைகள் தொடர்பில் கனடிய அரசு மேற்கொண்ட விமர்சனம் பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல விரோதத்தை  பிற்படுத்தும்வகையில் அமைந்திருந்தது எனவும் சவுதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா ஒரு மதிப்புமிக்க நாடு என கனடிய அரசு கருதுகிறது எனில் உடனடியாக இதுவரை எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.’

மேலும் செய்திகள்