பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் அக்டோபரில் சீனா சுற்றுப்பயணம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரும் அக்டோபரில் சீனா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-29 04:12 GMT
இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வரும் அக்டோபர் மாதம் சீனா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் எந்த தேதியில் இம்ரான்கான் சீனா செல்கிறார் என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. இம்ரான்கான் சீன பயணம் குறித்த பயணத்திட்டத்தை இருநாட்டு அதிகாரிகளும் இறுதி செய்வது வருவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 இம்ரான்கானின் பாகிஸ்தான் பயணத்தின் போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. இந்தியாவுக்கு கடும் போட்டியாக விளங்கும் சீனாவுக்கு, பாகிஸ்தான் பிரதமர் பயணம் மேற்கொள்வது தெற்காசியாவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இம்ரான்கான் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்