உலகைச்சுற்றி...

பொருளாதார கொள்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய கூட்டமைப்பும், சீனாவும் சம்மதித்துள்ளன.

Update: 2018-09-29 23:15 GMT


* ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிப்பதற்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளது.

* பெரும் பொருளாதார கொள்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐரோப்பிய கூட்டமைப்பும், சீனாவும் சம்மதித்துள்ளன.

* பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அசார் மசூதுவை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த நிலையில் தனது செயலை சீனா நியாயப்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர்கள் இடையே ஒருமித்த ஆதரவு இல்லை என்று சீனா கூறுகிறது.

* பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகக்கூறி ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்