2030-ல் உலகில் 4-வது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும்- நிபுணர்கள்

2030-ல் உலகில் நான்காவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2018-10-03 12:16 GMT
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் அரசு   மிகுந்த கவலை கொண்டிருக்கும் மற்றொரு விஷயம் அதிகரித்து வரும் மக்கள் தொகையாகும். இது குறித்து பாகிஸ்தான்  ஊடகம் தவன்( DAWN) தெரிவித்து உள்ளதாவது:-

2030-ல் உலகில் நான்காவது மிகப்பெரிய  மக்கள்தொகை கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்கும். தற்போது பாகிஸ்தான் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.தற்போதைய  நிலவரப்படி மக்கள் தொகை அதிகரித்தால் விரைவில் அந்த பட்டியலில் பாகிஸ்தான் 4 வது இடத்தை பிடிக்கும்.

மக்கள் தொகை  அதிகரிப்பு அச்சுறுத்தலுக்கு  காரணம் குடும்ப கட்டுபாட்டு திட்டங்களுக்கு   அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்று  நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அரசாங்கங்கள் / அதிகாரிகள் இந்த விசயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை . மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான திசையில்  செல்லவில்லை என்று அவர்கள் கூறி உள்ளனர்.

கராச்சியில் டவ் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு குழுவின் விவாதத்தில் சில நிபுணர்கள் இது குறித்த தகவலை வெளியிட்டனர்.  அந்த கலந்துரையாடலில் விழிப்புணர்வு திட்டங்களின் தேவை மற்றும் பெண்கள் கல்வி பற்றியும் வலியுறுத்தினர். கர்ப்பம் மற்றும் குழந்தை இறப்பு வீதம் போன்ற சிக்கல்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில்  பாகிஸ்தானில்  80 சதவீத   இளம் பெண்கள் கர்ப்பமடைவது  சுட்டிகாட்டபட்டது.

கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்ட இரண்டு  முக்கிய காரணிகள் ஆண் குழந்தை வேண்டும் என்ற "ஆசை" மேலும் முடிவெடுக்கும் தன்மை பெண்களிடம் இல்லாதது ஆகும் .

கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. 2017 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் வெளியிட்ட  புள்ளிவிபரப்படி   நாட்டின் மக்கள்தொகை 20.8 கோடியாக உயர்ந்துள்ளது. 1998 ம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் மக்கள்தொகை 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்