ஈராக்கில் புதிய அதிபர், பிரதமர் தேர்வு

ஈராக் புதிய அதிபராக பர்ஹாம் சாலேவும், பிரதமராக அதேல் அப்துல் மாஹ்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2018-10-03 17:37 GMT
பாக்தாத்,

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சாலே நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

ஈராக் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் குர்திஸ் இனத்தைச் சேர்ந்த குர்திஸ் தேசபக்த யூனியன் கட்சியின் வேட்பாளராக பர்ஹாம் சாலேவும், குர்திஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பவுட் ஹூசைனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பர்ஹாம் சலே பெரும்பான்மையுடன் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

பார்ஹம் சாலே ஈராக்கின் மதவாத அரசியல்வாதி ஆவார். பிரிட்டனில் பொறியியல் கல்வி பயின்றவர். மேலும் ஈராக்கின் குர்திஸ் மாகாணத்தின் பிரதமராகவும், ஈராக் கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை பிரதமராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் புதிய அதிபர் பார்ஹம் சாலே, பிரதமர் பதவிக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த அதேல் அப்துல் மாஹ்தியை தேர்வு செய்தார்.

மேலும் செய்திகள்