உலகைச் சுற்றி...

* அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து 6 வயது சிறுமி கண்ணீர் மல்க பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Update: 2018-10-03 22:30 GMT
மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரை சேர்ந்த கெல்ஸி, என்கிற அந்த சிறுமியின் பேச்சு காண்போரை கண்கலங்க செய்யும் வகையில் உள்ளது.

*பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேரில் சந்தித்து இருநாட்டு உறவு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

* ஈராக்கில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று கூடியது. இதில் குர்து இனத்தை சேர்ந்த பர்ஹாம் சலிஹ் (வயது 58) ஈராக்கின் 9-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை ஏற்குமாறு அடல் அப்தூல் மக்திக்கு அழைப்பு விடுத்தார்.

* ஆப்கானிஸ்தானின் நங்கர் மாகாணத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.

* மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு தொடர்பாக அவருடைய மனைவி ரோஷ்மா மன்சூரை, அந்நாட்டு ஊழல் தடுப்பு குழு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

* துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 83 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இதன் மூலம் ஒரே மாதத்தில் அதிக பயணிகள் பயன்படுத்திய விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உலக சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்