உலகைச் சுற்றி...

* ஏமன் நாட்டின் பிரதமர் அகமது பின் தாகரை, அதிபர் மன்சூர் ஹாதி நீக்கி உள்ளார்.

Update: 2018-10-16 23:00 GMT
* அமெரிக்காவில் 2020–ம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப், 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.740 கோடி) தேர்தல் நிதி திரட்டி உள்ளார்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பியும், அந்த நாட்டின் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப்பின் போலீஸ் காவலை மேலும் 10 நாட்களுக்கு அந்த நாட்டு கோர்ட்டு நீட்டித்து உள்ளது.

* பாகிஸ்தான் எல்லையில் ஈரான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 14 பேர் கடத்திச்செல்லப்பட்டனர். அவர்கள் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* சீனாவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டு நேரிட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ரஷியாவும், பாகிஸ்தானும் கூட்டு போர் பயிற்சியில் இந்த மாதம் ஈடுபட உள்ளன.

மேலும் செய்திகள்