அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

ஒரு வாரம் தொடர்ந்து செல்போன் உபயோகித்ததால் விரல்களை அசைக்க முடியாமல் அவதி!

Update: 2018-11-01 08:32 GMT

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கிய நேரம் தவிர பிற நேரங்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம்  செல்போன் பயன்படுத்தியுள்ளார். பின்னர், பணி முடிந்து விடுப்பு எடுத்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு சென்று சில மணி நேரத்திற்கு பிறகு அவருடைய கையில் வலி ஏற்பட்டு செல்போனை பிடித்திருக்கும்பொழுது கையை எவ்வாறு வைத்திருந்தாரோ அது போலவே மாறி செயலிழந்துள்ளது.

இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்த அவருக்கு டெனோசினோவிடிஸ் (tenosynovitis) என்ற நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும்,  பல மணி நேரம் தொடர்ந்து ஒரே வேலையை செய்தால் இந்த நோய் பாதிப்பு வரும் எனவும் தெரிவித்தனர்.  

மேலும் செய்திகள்