கம்போடிய இனப்படுகொலை : முன்னாள் பிரதமர் உள்பட 2 பேர் குற்றவாளி என அறிவிப்பு

20 லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதாக கம்போடிய இனப்படுகொலை வழக்கில் முன்னாள் பிரதமர் உள்பட 2 பேர் குற்றவாளி என அறிவிப்பு.

Update: 2018-11-16 10:21 GMT
கம்போடியாவில்  1970-ஆம் ஆண்டு பொல்பொட் தலைமையிலான கெமரூஜ் என்ற கம்யூனிசக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் சுமார்  20 லட்சம் கம்போடிய மக்கள் கொல்லப்பட்டனர்.

கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், பசி பட்டினி மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் என பலவற்றால்  இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், கெமரூஜ் கட்சியைச் சேர்ந்த, இன்று உயிருடன் இருக்கின்ற நான்கு மூத்த தலைவர்கள் மீது ஐநா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கியது.  ஆனால் அந்த 4 பேரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.

நான்கு ஆண்டு கால கெமரூஜ் ஆட்சியில் புரியப்பட்ட கொடுமைகளுக்காக இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இப்போது இவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் நாலாயிரம் பேர் சிவில் தரப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட இவர்களின் சாட்சியங்களும் வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்படவுள்ளன.

கெமரூஜ் ஆட்சியின் இரண்டு தலைவர்கள் முன்னாள் பிரதமர் ஈவில் நுவன் சியா (92) மற்றும்  87 வயதான கியு சாம்பன் மாநில தலைவராக இருந்தார். இவர்கள்  இனப்படுகொலை குற்றவாளி என கூறப்பட்டு உள்ளது. சாம் முஸ்லிம்கள் மற்றும் இனவழி வியட்நாமியர்களைக் கொன்ற குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக ஐ.நா. ஆதரவு நீதிமன்றத்தில் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்