உலகைச் சுற்றி...

* சாலமன் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

Update: 2018-11-16 22:45 GMT
*     ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜய்ரா நகரில் ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ரவிசங்கரின் தலைமையில் உலக அமைதிக்கான தியானம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பகுதியில் தியான நிகழ்ச்சியில் இவ்வளவு பேர் கூடியது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

*     அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 631 ஆக அதிகரித்துள்ளது.

*     காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வந்தவர்களில்
7 பேர், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பலியாகினர். இதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

*     சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் தொடர்புடைவர்கள் என கூறி 17 பேருக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்