திடீரென்று பறந்து சென்ற, பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமானிகள்

திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரிட்டிஷ் விமானிகள்.

Update: 2018-11-17 06:54 GMT
டுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பறந்து சென்ற பறக்கும் தட்டுகளைக் கண்டு விமானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரிட்டிஷ் விமான நிறுவனத்தைச்  சேர்ந்த விமானி கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அதிகாலை அயர்லாந்தைச் சேர்ந்த ஷானன் நகர வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டார். அப்போது அவர் தாங்கள் பறந்துகொண்டிருக்கும் இடத்தில் ஏதேனும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் ஏன் என்று கேட்டபோது, நாங்கள் பறக்கும் பகுதியில் எதோ ஒன்று வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினார். அதன் பின் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் சோதித்த பார்த்தபோது, அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லையே என்று பதிலளித்துள்ளனர்.

கனடாவின் மாண்ட்ரீயலிலிருந்து லண்டனின் ஹீத்ரோ  விமானநிலையத்திற்குப் பறந்துகொண்டிருந்த அந்த விமானி ஒரு பிரகாசமான ஒளி வேகமாக வடக்கு நோக்கிச் சென்றுள்ளதைப் பார்த்துள்ளார். தன் விமானம் போகும் பாதைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லையென்றாலும் அது என்னவாக இருக்கும் என்று அச்சத்திலே இப்படி கட்டுப்பாட்டு அறையிடம் கேட்டுள்ளார். இவர் மட்டும் இந்த காட்சியை பார்க்கவில்லை, மான்செஸ்டர் நகரை நோக்கிப் பறந்துகொண்டிருந்த வெர்ஜின் விமானத்தின் விமானியும் எதோ ஒன்று வேகமாக நகர்வதைப் பார்த்துள்ளார்.

அவரும் இவர்களின் உரையாடலில் இணைந்தார். அது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த விண்கல்லாக இருக்கலாம் என்றும் ஒரே பாதையில் இதேப் போன்று பல மிக வேகமாக நகர்ந்துகொண்டிருப்பதாக கூறினார். அவர், அதை இட் வாஸ் லைக் மாக் 2 என்று விவரித்தார். இது கேட்கும் ஒலியின் வேகத்தை விட இரு மடங்கு ஆகும். இந்த இரண்டு விமானிகள் பார்த்தது வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளதால், அதைப்பற்றி ஆராய்ச்சிகள் நடந்து  கொண்டிருக்கின்றன.

மேலும் செய்திகள்