உலகைச்சுற்றி....

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஆலோசகராக உள்ளார்.

Update: 2018-11-20 22:45 GMT
* அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர் கவுன்சில் தலைவராக சென்னையில் பிறந்த தமிழ்ப்பெண் சுருதி பழனியப்பன் (வயது 20) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* சீனாவில் ஹெனான் மாகாணத்தில் கடும் பனி மூட்டத்தில் 28 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து நேரிட்டது. இதில் 9 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஆலோசகராக உள்ளார். இவர் தன் சொந்த மின்னஞ்சல் முகவரியை அரசுப்பணிகளுக்கு பயன்படுத்தி மின்னஞ்சல்கள் அனுப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. அமெரிக்காவின் பணத்தை பெற்றுக்கொண்டு பயங்கரவாத ஒழிப்புக்கு பாகிஸ்தான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் சாடினார். பாகிஸ்தானில் பின்லேடன் பதுங்கி இருந்ததையும், தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் இம்ரான்கான் அவருக்கு பதிலடியாக அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பில் சண்டையிட்டு சந்தித்த இழப்புகள் போதும், இனி நமது மக்களுக்கு நல்லதை செய்வோம் என கூறி உள்ளார்.

* சிரியாவில் டமாஸ்கஸ் நகருக்கு அருகே சாலையோரங்களில் கிளர்ச்சியாளர்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை ராணுவம் கண்டுபிடித்து அழித்துள்ளது.


மேலும் செய்திகள்