சூரியனை ஒத்த இரட்டை பிறப்பு கிரகம் கண்டு பிடிப்பு

நமது சூரியன் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் ஒரு குழுவில் பிறந்தார். இப்போது வானியல் ஆராய்ச்சியாளர்கள் சூரியனின் நெருங்கிய சகோதரரை அடையாளம் கண்டுள்ளனர்.

Update: 2018-11-23 10:24 GMT
நமது சூரியன்  இப்போதைக்கு ஒரு அழகான தனிமையான வாழ்க்கை வாழலாம். ஆனால் அது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான போது, அது ஆயிரக்கணக்கான கிரகங்கள் பிறந்த குடும்பத்தில் ஒரு  நடுக்குழந்தையாக  இருந்தது. அதன் உடன் பிறந்த உடன்பிறப்பு கிரகங்கள் எல்லாமே கேலக்ஸிலிருந்தும் விலகி விட்டன. அவர்களை அடையாளம் காண கடினமாகிறது.

ஆனால் இப்போது போர்ச்சுக்கல்லை சேர்ந்த  வானியலாளர்கள்  சூரிய உடன்பிறப்பை  கண்டுபிடித்து உள்ளனர். அது மட்டும் அல்ல  சூரியனின் இரட்டை பிறவிகளாக இருக்கும் என்றும் கண்டறிந்து உள்ளனர். இந்த கிரகத்தில் வேற்று உயிரினங்கள் குறித்த ஆய்வு நடத்த தகுந்த இடமாகும்.

சூரியனின் உடன்பிறப்புகளை தேடும் பணி தசாப்தங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  நமது நட்சத்திரம் ஒரு "தீய இரட்டை" என 1980 களில் அது இருந்தது அனுமானிக்கப்பட்டது அதற்கு நெமிசிஸ் என பெயரிடப்பட்டது.

நீண்ட காலத்திற்கு முன் பிரிந்து சென்ற உடன்பிறப்புகளைக் கண்டறிந்து, நட்சத்திரங்களின் பிறப்பு பற்றியும், பிரபஞ்சத்திலிருந்தும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை நமக்கு அளிக்கலாம்.

முன்னணி ஆராய்ச்சியாளரான வர்தான் ஆதிபிக்யென் கூறியதாவது:-

சூரியனின் கடந்த காலத்தைப் பற்றி அதிகம் தெரியாததால், இந்த நட்சத்திரங்களை ஆய்வு செய்வது  கேலக்ஸி மற்றும் எந்த சூழல்களில் சூரியன் உருவானது என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்